Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் அட்ரஸ் அப்டேட் செய்ய வெறும் 5 நிமிடம் போதும்…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இப்போது ஆதார் கட்டாயமாகிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. அந்த ஆதாரில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் ஆதார் மையத்துக்குச் சென்று அப்டேட் செய்ய வேண்டும். அதில் பலருக்கு சிரமம் இருக்கலாம். வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலமாக ஆதாரில் எளிதில் அப்டேட் செய்ய முடியும்.

ஆதார் அமைப்பின் https://uidai.gov.in/ என்ற இணையப் பக்கத்தில் சென்று “Update your Address Online” என்பதை கிளிக் செய்யவும்.

உங்களிடம் சரியான முகவரிச் சான்று இருந்தால் “Proceed to Update Address” என்பதை கிளிக் செய்யவும்.

புதிதாக ஓப்பன் ஆகும் பக்கத்தில் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட்டு “Send OTP” அல்லது “Enter a TOTP” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி நம்பர் வரும். இதைப் பதிவிட்டால் உங்களது ஆதார் அக்கவுண்டில் நீங்கள் லாகின் செய்யலாம்.

இப்போது “Update Address by Address Proof” அல்லது “Update Address vis Secret Code” ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் உங்களது இருப்பிட முகவரியைப் பதிவு செய்து ”preview” கொடுக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் உங்களது முகவரியில் திருத்தம் செய்ய விரும்பினால் “modify” என்பதை கிளிக் செய்து திருத்தம் செய்யலாம். இல்லாவிட்டால் “submit” கொடுத்துவிடலாம்.அடுத்ததாக உங்களது முகவரிச் சான்றுக்கான சரியான ஆவணத்தின் ஸ்கேன் காப்பியை அப்லோடு செய்து ”submit” கொடுக்க வேண்டும். உங்களது ஆதார் அப்டேட் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும். இந்த நம்பரை வைத்து உங்களது ஆதார் அப்டேட் ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்கலாம்.

Categories

Tech |