நடிகை நயன்தாரா தனது காதலனிடம் திருமணம் குறித்த கண்டிஷன் போட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர அவர் நடித்த நெற்றிக்கண் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் நடிகை நயன்தாராவின் தந்தைக்கு சிறிது உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு இருப்பதால் நடிகை நயன்தாரா விரைவில் தனது காதலன் விக்னேஸ்வனை திருமணம் செய்து கொள்ள விருக்கிறார் என்று தகவல் வெளியானது.
ஆனால் நயன்தாரா தற்போது பிரபல இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. ஆகையால் நடிகை நயன்தாரா தனது காதலனிடம் இரண்டு வருடம் கழித்து திருமணத்தை பற்றி பேசலாம் என்று கண்டிஷன் போட்டுள்ளார்.