Categories
உலக செய்திகள்

அப்படி என்ன பேசினார்கள்..? சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தலிபான்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யை அப்துல் கானி தலைமையிலான தலிபான் குழு ஒன்று சந்தித்து பேசியுள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யை அப்துல் கானி தலைமையிலான தலிபான் குழு ஒன்று ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக சந்தித்துள்ளது. அந்த சந்திப்பில் சீனா நிலப்பகுதிக்கு தலிபான்களால் எந்தவித தொந்தரவும் ஏற்படக்கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து நோடா மற்றும் அமெரிக்கப் படைகள் விலகியதால் தற்போது அங்கு தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

அதோடு மட்டுமில்லாமல் ஈரான், பாகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் எல்லைப் பகுதிகளை தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ராணுவம் மீதும் அப்பாவி மக்கள் மீதும் தொடர் தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்நிலையில் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் ஆதரவாளர்களை கடந்த ஜூன் மாதம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை நேரில் சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில் “ஆப்கானிஸ்தானில் தலிபான்களை மீண்டும் அரசியல் அமர செய்கிறேன்” என்று வாங் யீ உறுதி அளித்ததாகவும் ஆப்கன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஆப்கானிஸ்தானில் எல்லை மீறி நடக்கும் தாக்குதல்களை தடுப்பதற்காக ஆப்கன் அரசு தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியுள்ள நிலையில் சீனா தன்னுடைய அரசியலை தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலமாக கையில் எடுக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Categories

Tech |