Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளிய போகும்போது உஷாரா இருக்கனும்… ஓரமாக நின்ற இளைஞர்கள்… சிறையில் அடைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்துள்ள காளிபட்டி பாலக்காடு பகுதியில் மூர்த்தி(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேரு முன்தினம் இருசக்கர வாகனம் மூலம் அக்கரைப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் சென்றபோது மர்மநபர்கள் 3 பேர் மூர்த்தியை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவரை தாக்கி மூர்த்தியிடம் இருந்து 5,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதலில் காயமடைந்த மூர்த்தியை அங்கிருந்தவர்கள் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து மூர்த்தி மல்லசமுத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் இளைஞரிடம் பணத்தை பறித்து சென்றது வடுகம்பாளையத்தை திருநாவுக்கரசு(25), தனபால்(30) மற்றும் வெண்ணந்தூரை சேர்ந்த மணிகண்டன்(24) என்பது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் அவர்கள் 3 போரையும் கைது செய்து ராசிபுரம் சிறையில் அடைந்துள்ளார்.

Categories

Tech |