Categories
உலக செய்திகள்

இவருக்கு இணை எவரேனும் உண்டா….? சிறுவனின் நீண்ட நாள் கனவு…. பலிக்க வைத்த தந்தை…!!

எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ள மகனின் நீண்ட நாள் ஆசை ஒன்றை தந்தையான ஜூன் லுயிஸ் கான்ஸ்டான்ஸா நிறைவேற்றியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் ஆஸ்கார் கான்ஸ்டான்ஸா என்ற 16 வயது சிறுவன் சக்கர நாற்காலியில் தனது வாழ்வை கழித்துக் கொண்டிருந்தான். இதனையடுத்து ஆஸ்கார்  நீண்ட நாள் ஆசையை தனது தந்தையான ஜூன் லூயிஸ் கான்ஸ்டான்ஸாவிடம்  கூறியுள்ளார். அதில் “தான் எழுந்து நடக்க ஒரு ரோபோ வேண்டும்” என்று கேட்டுள்ளார். மேலும் ஜூன் லுயிஸ் கான்ஸ்டான்ஸா ஒரு ரோபோட்டிக் பொறியாளர் என்பதால் தனது மகனின் ஆசைக்கு இணங்க விசேஷமான ரோபாவை ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோவானது ஆஸ்காரின் மார்பு, இடுப்பு, முழங்கால் கால்கள் போன்ற உறுப்புகளுடன் சேர்த்து கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்கார் ரோபோவிடம் நில் என்று கட்டளையிட்டதும் அது அவரை மெதுவாக தாங்கி எழுந்து நிற்கிறது.

அதிலும் இவரின் தந்தை ஜீன் லூயிஸ் கான்ஸ்டான்ஸா wandercraft என்னும் ரோபோட் தயாரிக்கும் நிறுவனங்களில் பொறியாளராக பணிபுரிகிறார். இந்த ரோபோட் குறித்து ஜூன் கூறியதவாது ” இனி வரும் 10 ஆண்டுகளில் சக்கர நாற்காலிக்கு வேலை இருக்காது” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து wandercraft நிறுவனத்தில் வடிவமைக்கப்படும்  உடலை தாங்கி நிற்கும் அல்லது புற உடற்கூடு ரோபோவானது பிரான்ஸ், லக்சம்பர்க் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் அதிக அளவு விற்பனையாக்கிறது என்றும் கூறியுள்ளார். இதன் ஒரு பகுதி மட்டும் சுமார் 176,000 டாலர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |