Categories
தேசிய செய்திகள்

குறைந்த கட்டணத்தில் இன்பச் சுற்றுலா…. சீக்கிரம் முந்துங்கள் – IRCTC அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ன்றனர். தளர்வுகளின்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவின் கொச்சின், மூணாறு, தேக்கடி, குமரக்கோட்டம் ஆகிய பகுதிகளுக்கு ஆறு நாட்கள் குறைந்த கட்டணத்தில் இன்ப சுற்றுலா செல்லும் அட்டவணையை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து சுற்றுலா பயணம் தொடங்குகிறது. இந்த சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.23,500 மற்றும் வரி நிர்ணயிக்கப்படும். இதிலேயே உணவு, தங்குமிடம் பயணச்செலவு அனைத்தும் அடங்கும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |