தமிழக அரசு மக்களுடைய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
வாறு கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை 3 முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகளுக்கு தலா ரூ.500 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்பட முடிவு செய்துள்ளது.