தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது கணிசமான அளவு அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 28 நாட்களுக்கு பிறகு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதற்காக கண்காணிப்பு மையத்தில் பொது நலம், இதயம், சர்க்கரை நோய் ரத்த நாள பிரிவு, நுரையீரல் துறை மற்றும் ஆய்வக வசதி உட்பட 15 துறைகளை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.