Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு…? – வெளியான நல்ல செய்தி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.

இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விரைவில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து நற்செய்தி வரும். தமிழகத்தில் ஸ்டாலின் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. தமிழக நிதியமைச்சர்  டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதை ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |