Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துசண்டை : இந்திய வீரர் சதீஷ் குமார் …. காலிறுதிக்கு முன்னேறினார் ….!!!

 ஒலிம்பிக்கில் ஆண்கள் 91 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டை  போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான சூப்பர் ஹெவி வெயிட் ( 91 கிலோ எடைப் பிரிவு ) குத்துச்சண்டை போட்டியில்  ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் , ஜமைக்காவை சேர்ந்த  ரிகார்டோ பிரௌனை  எதிர்கொண்டார்.

இதில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 1- ஆம் தேதி நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரான  பகோதிர் ஜாலோலோவை எதிர்கொள்கிறார்.

Categories

Tech |