Categories
Uncategorized உலக செய்திகள்

சீன பயணம் மேற்கொண்ட தலிபான்கள் குழு…. சீன வெளியுறவுதுறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை….!!

ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் குழு சீன வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனிடையே தலிபான் தீவிரவாதிகளுடன்  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நாட்டின் அமைதியை நிலைநாட்ட ஆப்கானிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா பரதர் அகுந்த்  மற்றும் 9 பேர் கொண்ட குழு சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டது.

இதனிடையே தலிபான் குழு நேற்று முன்தினம் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யியை நேரில் சந்தித்து   பேச்சுவார்த்தை நடத்தியது. இதுகுறித்து தலிபான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் முகமது நசீம் பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருநாட்டு தலைவர்களும் ஆப்கானிஸ்தானின் அமைதி, அரசியல், பொருளாதாரம் குறித்து பேசினர் என்றும் மேலும் இருநாட்டு உறவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானை சீனா உட்பட எந்த நாட்டுக்கு எதிராகவும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படாது என தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது எனவும் கூறினார்.

Categories

Tech |