Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை இது…. மனைவியை எரித்த கணவன்…. ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்…!!

தமிழகத்தில் மெக்சிகோ பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது கணவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் மற்றும் அவரது மனைவி செசில்லா அகஸ்டா ஆவர். இந்த தம்பதிக்கு அடில்லா என்ற மகள் உள்ளார். இந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 2011 ஜூலையில் ஆராய்ச்சி கல்வி படிப்பதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு மன்சூர் தனது மகள் அடில்லாவுடன் வந்துள்ளார். இவர் மனைவி செசில்லா கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் கலா மண்டலத்தில் மோகினி நடனம் ஆட பயிற்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் கேரளாவில் தங்கியுள்ள செசில்லா  அடிக்கடி தன் குழந்தையை பார்ப்பதற்காக விருதுநகர் வந்துள்ளார். இவர் மன்சூரிடம் குழந்தையை 2012இல் வெளிநாடு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார். இதன் பின்பு கடந்த 2012 ஏப்ரல் 9 ஆம் தேதி குழந்தையை பள்ளிக்கு அனுப்பிய பின் இருவருக்கும்  தகராறு ஏற்பட்டு மன்சூர் செசிலாவை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து மன்சூர் செசிலாவின்  உடலை காரில் எடுத்துச் சென்று மதுரைக்கு அருகிலுள்ள இடத்தில் ஒரு புதரில் வைத்து எரித்துள்ளார். இந்த சம்பவமானது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இந்த வழக்கில் மதுரை மகளிர் நீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் மன்சூருக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. இதனை தொடர்ந்து மன்சூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் செசில்லா உடலில் தழும்புகள் இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மன்சூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் அவருக்கு எதிரான சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் இல்லை என்பதால் மன்சூரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மன்சூருக்கு  ஜாமீன் வழங்கியுள்ளது.

Categories

Tech |