அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டதுக்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்க்கு கல்வியாளர்கள் பலரும் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முக.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், “இந்திய – மேல்நாட்டு தத்துவப் படிப்பு” என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், "இந்திய – மேல்நாட்டு தத்துவப் படிப்பு" என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது! pic.twitter.com/awV7NHBM2J
— M.K.Stalin (@mkstalin) September 25, 2019