Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“விரைவில் வெளியிட வேண்டும்” நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவரான விக்னேஷ் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் செயலாளரான ஐயப்ப குலசேகர ஆழ்வாரும் மற்றும் பொருளாளரான வைகுண்டபதி ஆகியோரும் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் மாவட்ட ஆட்சியரை சந்தித்த இவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கான தற்கால முதுநிலை பட்டியல் வெற்று பட்டியலாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ளது எனவும், மீதி தகுதியுள்ள நபர்களின் முதுநிலை பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டபோது, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களில் துணை வட்டாட்சியர் அலுவலர் நிலையில் முதுநிலை மற்றும் பணி ஒதுக்கீடு செய்த ஆணை வெளியிடப்படாமல் இருப்பதால் அதனையும் விரைவில் வெளியிட வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவரான சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |