ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அடானு தாஸ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32- வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ் முதல் சுற்றில் ,சீன தைஃபே சேர்ந்த யு-செங் டெங்கை எதிர்கொண்டு 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2-வது சுற்றில் தென்கொரிய வீரர் ஜின்யெக் ஓ-வை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் 5 செட்டுகளின் முடிவில் இரு வீரர்களும் தலா 5 செட் பாயிண்ட் பெற்று சமநிலையில் இருந்ததால் ஷூட் ஆஃப் பாயிண்ட் கடைபிடிக்கப்பட்டது. இதில் தென்கொரிய வீரர் 9 புள்ளிகளும் , இந்தியாவின் அதானு தாஸ் 10 புள்ளிகளும் பெற்றார். இதனால் 6-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற அதானு தாஸ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து வருகின்ற 30-ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் ஜப்பான் வீரர் எதிர்கொள்கிறார்.