Categories
தேசிய செய்திகள்

OMG: மீண்டும் இரண்டு நாட்கள்…. முழு ஊரடங்கு…!!!

கேரளாவில் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரளாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்யும். தற்போது நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதல் இடத்தைப் பிடிக்கின்றது.

இதை தடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள அரசின் இந்த வார இறுதி நாட்களான ஜூலை 31 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய இரண்டு தினங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. தற்போது நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், கேரளாவில் மூன்றாவது முறையாக மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |