பேனர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
விதி மீறி வைத்த பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த உயிரிழப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு பேனர் வைக்க கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டனர். அதே போல பேனர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முறையான அனுமதி இல்லாத பேனரை அடித்துக் கொடுக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 5,000 அபராதம் விதித்து ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுமென அனைத்து பேனர் அச்சடிக்கும் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று டிஜிட்டல் பேனர் நிறுவன உரிமையாளர் பசீர் அகமது என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மேலும் அதில் யார் விதி மீறி பேனர் வைக்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை தவிர்த்து விட்டு யார் டிஜிட்டல் பேனரை அச்சடிக்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடுவதும் , டிஜிட்டல் பேனர் அச்சடித்துக் கொடுத்த ஒரே காரணத்துக்காக தங்கள் அலுவலகங்களில் இருக்கக்கூடிய விளம்பர பலகைகளையும் , பெயர் பலகைகளையும் அதிகாரிகளுடன் உடைப்பது பொருத்தமற்றது.
விதிமுறைகளை மீறி பேனர் வைக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை உறுதியளிக்கும் டிஜிட்டல் பேனர் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எங்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும். டிஜிட்டல் பேனர் அச்சிடுதல் மட்டும்தான் தங்களுடைய பணி எந்த இடத்தில் வைக்கிறார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியாது. தங்கள் தொழில்களை நசுக்கும் வகையில் மாநகராட்சியும் , அரசும் செயல்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தார்.எனவே மாநகராட்சியின் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து இந்த வழக்கில் அரசு சார்பில் விளக்கம் அளிக்க கோரி சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, இந்த வழக்கை அக்டோபர் 23_ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.