Categories
உலக செய்திகள்

இப்படி தான் வாழ்கிறார்களா….? நெருக்கடியில் இருக்கும் மக்கள்…. தரவுகள் தரும் விவரங்கள்…!!

புலம்பெயர்ந்தோரின் நிதி நிலைமையானது சுவிஸ் நாட்டில் உள்ளவர்களின் நிதி நிலையை விடக் குறைவாக உள்ளது. 

ஸ்விட்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வருபவர்களின் நிதி நிலைமை அந்நாட்டில் உள்ளவர்களை விட மோசமாக உள்ளது என பெடரல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் புலம்பெயர்ந்தோரின் வாடகை வீதமானது சுவிஸ் நாட்டில் வசிக்கின்றவர்களின் வாடகையை விட 10% அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து வாடகை அதிகம் இருப்பினும்  புலம்பெயர்ந்தோர் நெரிசலான மற்றும் இரைச்சல் அதிகமாக உள்ள இடங்களில் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் புலம்பெயர்ந்தவர்களின் ஒரு நபர் சராசரியாக  32 சதுர மீட்டரில் வசிக்கும் நிலையில் சுவிஸ் குடிமக்கள் சராசரியாக 45 சதுர மீட்டருக்கு ஒருவர் என வாழ்கின்றனர். இந்த அளவானது சுவிஸ் குடிமக்களை விட 40% குறைவாகும். மேலும் சுவிட்சர்லாந்தில் ஒருவரது நிதி நிலைமை என்பது அவரின் கல்வி மற்றும் வயது போன்ற விஷயங்களை உள்ளடக்கியது அது புலம்பெயர்தலினால் மட்டும் ஏற்படும் பிரச்சனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |