நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இருக்கும் கண்கள் மூடினால், மூன்றாவது கண் திறக்கும்! இது நயன்தாராவின் சுட்டெரிக்கும் #Netrikann Streaming from August 13th in Tamil, Telugu, Kannada and Malayalam.#NetrikannTrailer for you all 🎥 https://t.co/lN2XyIVDMK
— Nayanthara✨ (@NayantharaU) July 29, 2021
நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக இருந்தும் சீரியல் கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்க எப்படி உதவுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் தெரிகிறது. மேலும் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி திரில் காட்சிகள் கொண்ட இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.