லேடி சூப்பர் ஸ்டார் குறித்த ரகசியம் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய தமிழ் திரையுலகில் அனைவரின் இதயத்தையும் கொள்ளை அடித்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்துள்ளார். இவர் டோரா, மூக்குத்தி அம்மன், மாயா, காஷ்மோரா போன்ற பெண்களை மையமாக வைத்து உருவாகிய படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நயன்தாரா சில சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார். ஆனால் அனைத்து விமர்சனங்களையும் நீக்கிவிட்டு கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் நயன்தாராவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.
அதனால் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் நயன்தாராவுக்கு அட்லி மூலமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே திருமணம் நடக்கும் என்று நயன் கூறிவிட்டார். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் ” உங்களுக்கும் நயன்தாராவுக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் என்ன?” என்று கேட்டுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன் “இரவில் சாப்பிட்ட பிறகு அனைத்து பாத்திரங்களையும் நயன்தாராவே கழுவி விடுவார்” என்று வித்தியாசமான பதிலைக் கூறியுள்ளார்.