Categories
மாவட்ட செய்திகள்

அதனை அழித்து விடுங்கள்…. காவல்துறையினருக்கு… போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு…!!

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் சரக்கு வாகனம் ஏற்றி அழித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-ஆம் அலை வேகமாக பரவியதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இதனால் டாஸ்மார்க், சலூன், டீ போன்ற கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்திச் சென்று சேலம் பகுதியில் விற்பனை செய்துள்ளனர். இதனையறிந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அவ்வாறு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 3,115 மதுபாட்டில்களை காவல் நிலையத்தில் இருந்துள்ளன. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் என்பவர் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் அனைத்தையும் அழிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட 3,115 மது பாட்டில்களை கொண்டு சென்று சரபங்கா ஆற்றின் பக்கத்தில் கொட்டி அதன் மீது சரக்கு வாகனத்தை ஏற்றி அனைத்தையும் அழித்து விட்டனர்.

Categories

Tech |