சார்ப்பட்டா திரைப்படத்தைக் கண்ட நடிகர் சூர்யா ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
சார்ப்பட்டா திரைப்படமானது ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படமானது 70களில் வாழ்ந்த குத்துசண்டை வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சார்ப்பட்டா திரைப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நடிகருக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சார்பட்டா திரைப்படமானது தமிழ் சினிமாவிலுள்ள நடிகர்கள், இயக்குநர்கள் என பலரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா சார்ப்பட்டா திரைப்படத்தை பார்த்து சமூக ஊடகமான ட்விட்டரில் ஆர்யாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில் “திரைப்படமானது வடசென்னை மக்களின் வாழ்க்கையை தத்ருபமாக கண்முன் நிலை நிறுத்துகிறது. சார்ப்பட்டா திரைப்படத்தில் பணி புரிந்த இயக்குனர், நடிகர்கள், படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.