ரசாயன தொழிற்சாலையில் கரும்புகை வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோவிலூர் ரசாயன தொழிற்சாலையில் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த தொழிற்சாலையில் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு கூடினர். இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை அமைதிப்படுத்தினர். அதன்பின் ரசாயன தொழிற்சாலைக்குள் அதிகாரிகள் சென்று அங்குள்ளவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அதில் ஆலை தரப்பினர் கூறும்போது கொள்கலனில் அடிக்கடி அழுத்தம் ஏற்படுவதால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது வழக்கம். இதனை கண்காணிப்பதற்கு தேவையான ஏற்பாடு எப்போதும் செய்யப்பட்டிருக்கும். மேலும் இந்த நிகழ்வுகளை எளிதில் எதிர்கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் எப்போதும் தயார் நிலையில் செய்யப்பட்டிருக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து தாசில்தார் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.