Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக டிவியில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் படம்?… படக்குழு எடுத்த அதிரடி முடிவு…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Makers of Sivakarthikeyan's Doctor give an update: The film is fully ready  | Entertainment News,The Indian Express

ஏற்கனவே இரண்டு முறை டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே இந்த படம் ஓடிடியில் ரிலீஸாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் டாக்டர் படத்தை நேரடியாக டிவியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் டிவியில் இந்த படம் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |