Categories
உலக செய்திகள்

நகரைச் சூழ்ந்த காட்டுத்தீ…. பீதியில் மக்கள்….. விசாரணைக்கு உத்தரவிட்ட அதிபர்…!!

நகருக்குள் பரவிய காட்டுத் தீயினால் குடியிருப்பில் இருந்து மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர்.

துருக்கி நாட்டில் உள்ள  மனவ்கட் நகர் பகுதியில் இருக்கும் காடுகளில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயானது வேகமாக வீசிய காற்றினால் காடு முழுவதும் பரவி கரும்புகை நகரை சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த தீயானது மனவ்கட்நகர் பகுதிக்குள் பரவியாதல் அங்குள்ள பல்வேறு கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து பொதுமக்களுக்கு  ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் தங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதனையடுத்து இந்த தீயை அணைக்கும் பணியில் 400 வீரர்கள், 19 ஹெலிகாப்டர்கள், 108 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அந்நாட்டின் அதிபரான டயிப் எர்டோகன் கூறியதாவது “தற்சமயம் பரவியுள்ள காட்டுதீயானது எந்தவித உயிர்சேதமும் இல்லாமல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.மேலும் காட்டுத்தீ ஏற்படுவதற்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படவில்லை. அதற்கான விசாரணை நடத்துவதற்காக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |