தேனி மாவட்டத்தில் மருந்து கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரையில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூன்றாந்தல் பகுதியில் மருந்து கடையை நடந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி ஆண்டு இவரது கடையின் பூட்டை உடைத்து மர்மநபர் ஒருவர் அங்கே இருந்த பணத்தை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து மோகன் அடுத்த நாள் காலையில் கடையை திறப்பதற்கு வந்து பார்த்த பொது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக தென்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருந்து கடையில் உள்ள சிசிடிவி காட்சியலை ஆய்வு செய்ததில் மர்மநபர் ஒருவர் பணத்தை திருடி சென்ற கட்சி தெளிவாக பதிவாகி இருந்துள்ளது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது மோகனுடைய கடையில் திருடிய அதே நபர் கடலந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கடையிலும் திருடியது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அடங்குளக்காரவினை பகுதியில் வசிக்கும் சாகுல்ஹமீது(55) என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக தனிப்படையினர் கேரளாவிற்கு விரைந்து சென்று அவரை கைது செய்து தேனிக்கு அழைத்து வந்த நிலையில் அவரிடம் இருந்து 1,10,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.