Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தவறாக கூறிய வாலிபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. தஞ்சையில் பரபரப்பு….!!

முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 1 1\2 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்பவர் சுகன்யாவை மோட்டார்சைக்கிளில் பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி கொண்டுபோய் விட்டுள்ளார். இந்நிலையில் சோழபுரம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பவருக்கும் சுகன்யாவிற்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றது. இதனையடுத்து ஆகாஷ் சுகன்யா குறித்து அவரது கணவர் உள்ளிட்ட சிலரிடம் தவறாக கூறியுள்ளார்.

இதனால் சுகன்யாவின் தந்தையான சோமசுந்தரம் ஆகாஷை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆகாஷ் குடும்பத்திற்கும் சோமசுந்தரம் குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆகாஷ், சோமசுந்தரம் வீட்டிற்கு சென்று சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் சுகன்யாவை ஆகாஷ் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சுகன்யா ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சுகன்யா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |