Categories
உலக செய்திகள்

ஆமை போல செயல்பட்டு முன்னேறும் பிரான்ஸ்.. பிரிட்டனை பின்னுக்கு தள்ளுமா..?

தடுப்பூசி செலுத்தும் பணியில் பிரிட்டனை பிரான்ஸ் முந்தி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் இன்னும் 21 நாட்களில் பிரிட்டனை பிரான்ஸ் தடுப்பூசி திட்டத்தில் முந்தும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பிரான்சில் சராசரியாக தினசரி, 3,30,000 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே இந்த அடிப்படையில் முதலிடத்தில் பிரான்ஸ் இருக்கிறது.

எனினும் பிரிட்டனில் தினசரி 44,000 நபர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனினும் பிரிட்டன் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியபோது வெகு தீவிரமாக செயல்பட்டது. அப்போது பிரான்ஸ் மெதுவாகவே ஆரம்பித்தது. எனினும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்போகும் சமயத்தில் இறுதியில், பிரான்ஸ் தீவிரமாக செயல்பட்டு பிரிட்டனை முந்தப்போகிறது. எனவே பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் கதை முயலாமை பந்தயம் போல ஆகிவிட்டது.

Categories

Tech |