கோவிலின் உள்ளே 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மாணிக்கம்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சிவலிங்கத்தின் மீது ஏறி சுற்றிக் கொண்டு படமெடுத்து ஆடியுள்ளது. அதன்பின் அங்கிருந்து நகர்ந்து சென்ற நல்ல பாம்பு அம்மன் சிலையின் தலை மீது ஏறி படமெடுத்து ஆடியது.
இதனை பார்க்க ஏராளமான பக்தர்கள் கோவிலில் பரவசமுடன் குவிந்தனர்.
இதனையடுத்து பாம்பு பிடி இளைஞரான யுவராஜுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி யுவராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நல்ல பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். இதனால் கோவிலில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.