Categories
உலக செய்திகள்

ஜீ சேனலுக்கு வரணும்னா ஒரு கோடி சம்பளம்…. நானும் முன்னணி நடிகைகளைப் போல செட்டில் ஆகணும்…. கருத்து வெளியிட்ட இளம் நடிகை….!!

இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி ஜீ தெலுங்கு சேனல் டிவி ஷோக்களில் கலந்து கொள்ள ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக தொலைக்காட்சிகள் பிரபலமான நடிகர், நடிகைகளை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து நிகழ்ச்சியை ஒளிபரப்புவது வழக்கத்தில் இருக்கும் ஒன்றாகும். இந்த வருகைக்காக பிரபலங்களுக்கு தனது சேனல் மூலமாக ஒரு சம்பளத்தையும் அளிக்கும். இந்த சம்பளத் தொகையானது பிரபலங்களின் வளர்ச்சியை பொருத்து அமையும். இதனிடையே தமிழிலும் தெலுங்கிலும் பிரபலமான சேனலில் ஒன்று ஜீ தமிழ், ஜீ தெலுங்கு சேனல்கள் ஆகும். இதில் பலவித சீரியல்கள் ,படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜீ தெலுங்கு சேனலுக்கு உப்பண்ணா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளதாகவும், அவருக்கு ஒரு கோடி சம்பளம் அளிக்கப்படும் என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கீர்த்தி ஷெட்டி ஜீ தெலுங்கு சேனலில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சிகளில் கூப்பிடும்போது ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டு  அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டி பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளை போல சம்பளங்களை வாங்க வேண்டும் என்பது தான் அவரது ஆசை எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |