தேனி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஆசை வார்த்தை காட்டி காரில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து போடி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடவடிக்கை எடுத்து சிறுமியை கடத்தி சென்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.