மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததால் மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து ஹரிதாஸ் படுகாயமடைந்தார்.
இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக ஹரிதாஸை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹரிதாஸ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.