Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில்…. அரசு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் பள்ளிகளை திறக்க மட்டும் அனுமதியளிக்கவில்லை. ஆனால் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் சேர 56,296 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |