தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் புதிய போஸ்டரில் குறிப்பிட்டுள்ள அடைமொழி பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கி வைக்கிறார்.இதை தொடர்ந்து அவர்தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். அதன்படி சேகர் கம்முலா இயக்கும் இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தெலுங்கில் உருவாகிவரும் இத்திரைப்படத்தினை தமிழ், ஹிந்தி மொழிகளிலும் வெளியிட உள்ளனர். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. அதில் தனுஷின் புகைப்படத்தோடு இளைய சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் போன்றே கடந்த 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என்று அடைமொழியுடன் அழைத்தனர்.
அப்போது இதனை அறிந்த தனுஷ் தகுதிக்கு மீறிய புகழ்ச்சி எனக்கு வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன் பிறகு இவ்வாறு அவரை யாரும் அழைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதே அடைமொழியை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.