Categories
சினிமா தமிழ் சினிமா

மூன்று வருட சிறை தண்டனை…. சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் புரோமோ….!!!

விஜய் டிவி சீரியல் புரமோ பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதுமட்டுமன்றி இந்த சேனலில் புதியபுதிய சீரியல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக வந்துள்ள சீரியலின் பெயர் தென்றல் வந்து எண்ணை தொடும்.

இந்த சீரியலில் பவித்ரா மற்றும் வினோத் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இந்த சீரியலின் பிரமோ தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த புரோமோவில் கதாநாயகன் கதாநாயகியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கோவிலில் தாலி கட்டுவது போல காண்பிக்கப்பட்டிருக்கிறது.

இணையத்தில் செம வைரலாக பரவி வந்த இந்த புரோமோவை கண்ட டாக்டர் வருண் குமார் ஐபிஎஸ் இதுகுறித்து கமெண்ட் செய்துள்ளார். மேலும் இதுபோன்ற செயல்களுக்கு எதிரான சட்டங்களை சுட்டிக் காட்டியவர் மூன்று வருட சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/kavithamurali/status/1419334019011907591

Categories

Tech |