சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சித்தாண்ட புரம் கிராமத்தில் விவசாயியான ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு இடையே ராமச்சந்திரன் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்ட விரோதமாக வளர்த்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.