மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் தற்போது சர்காரு வாரி பாட்டா படம் உருவாகி வருகிறது. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் ஜி.எம்.பி புரொடக்சன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது.
And Here We Start Our Works for #SarkaruVaariPaata 🎵❤️🦁🎧 @KeerthyOfficial #Augusttttttt !!! Come VeryVery sooooooonNnNnN 💨
Get ready folks !! 🪧📢 pic.twitter.com/IgNzU3Ch1g— thaman S (@MusicThaman) July 28, 2021
மேலும் வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘சர்காரு வாரி பாட்டா படத்தின் பணிகளை தொடங்குகிறோம் . ஆகஸ்ட் மாதம் வருகிறது. எல்லோரும் தயாராகுங்கள்’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.