கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருங்குறிகை கிராமத்தில் கட்டிட தொழிலாளியான கப்பல்துரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 25 – ஆம் தேதியன்று நரிப்பாளையம் கிராமத்தில் இருக்கும் வனப்பகுதியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பெண்ணான ரோஷினி ராய் என்பவரை கப்பல்துரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கப்பல் துரையின் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் கப்பல் துரையின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரான ஸ்ரீதர் போலீஸ் சூப்பிரண்டான ஜியாவுல்ஹக்கிடம் கப்பல் துரை என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.