Categories
உலக செய்திகள்

திருமணமாகி 15 நாள் தான் ஆகுது..! கணவர் மர்ம மரணம்… மனைவி பரபரப்பு தகவல்..!!

இந்தியாவிலிருந்து கனடாவிற்கு சென்ற புது பெண்ணின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் உள்ள Khote Gobindpura என்ற கிராமத்தில் Lovepreet Singh ( 23 ) என்பவருக்கும், Beant kaur ( 21 ) என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு Beant kaur ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்று கனடாவிற்கு கல்வி கற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் Lovepreet Singh அவருடைய கல்வி செலவுக்காக 25 லட்சம் வழங்கியதாகவும், Beant kaur அவருடைய கணவரை கனடாவுக்கு அழைத்து செல்லவில்லை என்றும் கணவருடனான உறவை முடித்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து Lovepreet Singh தனது பண்ணையில் ஜூன் மாதம் 23-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து அவருடைய குடும்பத்தார் கூறும்போது Lovepreet Singh வயலுக்கு பூச்சி மருந்து அடிக்கும் போது இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விஷயம் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கிய நிலையில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420-ன் கீழ் Lovepreet Singh மனைவி Beant kaur மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் Beant kaur தனது மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, கொரோனா காலகட்டம் என்பதால் தான் தன் கணவரை கனடாவுக்கு அழைத்து செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |