ரயில்வே ஊழியர்களை தடுப்பூசி போட வைப்பதற்காக பாகிஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸை எதிராக மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்களை போட வைப்பதற்காக பல்வேறு நாடுகள் சலுகைகள் மற்றும் கடுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து பாகிஸ்தான் அரசும் மக்களை தடுப்பூசி போட வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
ஆதலால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரயில்வே ஊழியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக அந்தந்த மாவட்ட அலுவலகங்களுக்கு பாகிஸ்தான் நாட்டின் ரயில்வே துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.