Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு.!!

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி வேட்பாளர்கள் (நாளை மறுநாள்)  நாளை அறிவிக்கப்படுவார்கள் என்று காங்.தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது .இதையடுத்து  திமுக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நேற்று முன் தினம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதேபோல  நாம் தமிழர் கட்சியும் 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.

Image result for ks alagiri

 

இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்  நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைதேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதன்படி நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதாக தெரிகிறது.  மேலும் கோவையில் செப்.30 ஆம் தேதி கே.எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

Categories

Tech |