ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரானது மிகவும் பயனுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கோரோணா தடுப்பூசியை போன்று ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் இரண்டுக்கும் வெவ்வேறு வகையான அடினோ வைரஸ் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு டோஸ்களையும் மூன்று வார இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும்.
அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசியின் இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவில் பக்க விளைவுகள் மற்றும் பாதகமான எதிர் விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் 91.6% செயல்திறன் கொண்டது எனவும் தெரியவந்துள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்போ, ஐரோப்பிய மருந்துகள் முகமையோ ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை.
அதேசமயம் இந்த தடுப்பூசியால் ஜான்சன் & ஜான்சன், அஸ்ட்ராஜெனகா உள்ளிட்ட தடுப்பூசிகளை போல ரத்த உறைவு பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்று அர்ஜென்டினாவில் 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தடுப்பூசி பற்றிய நிஜ உலக தரவுகள் இன்னும் போதுமான அளவு வெளிவரவில்லை என்றே கூறப்படுகிறது.