Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர…. தமிழகத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து மாணவர் சேர்க்கைகள் மற்றும் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி கால அட்டவணை தயாரித்தல், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணி, கல்வி தொலைக்காட்சி பணிகள், மாணவர் சேர்க்கை பணிகள், பாடப்புத்தகம் வினியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு கட்டாயம் வந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |