உலகம் முழுவதுமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் இதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த அனைவருமே கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று பாகிஸ்தான் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து ஊழியர்களும் கட்டாயம்ஆகஸ்ட்-31 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியரின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.