விருச்சிகம் ராசி அன்பர்களே.! தடைகளை உடைத்தெறிந்து முன்னேறி செல்வீர்கள்.
இன்று புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது மனதை அமைதியாக வைத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற நல்ல பணம் இருக்கும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி என்பது கண்டிப்பாக இருக்கும். பல தடங்கல்கள் ஏற்பட்டாலும் தடைகளை உடைத்தெறிந்து முன்னேறி செல்வீர்கள். வெளியூர் பயணங்கள் ஏற்படும்.
வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் இருக்கும். உயர் அதிகாரிகளின் நட்பும் கிடைக்கும். தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். முன்கோபங்களை ஏற்படுத்த வேண்டாம். பெண்கள் பக்குவமாக எந்த ஒரு விஷயத்தையும் கையாள வேண்டும். மாணவர்களுக்கும் கல்வி பற்றிய அக்கறை அதிகமாக இருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க கூடிய சூழலும் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நிலைபாடுகள் எல்லாம் சீராக இருக்கும். காதல் உங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தாது. கவலை பட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் வெள்ளை