தனுசு ராசி அன்பர்களே.! எந்த காரியத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
இன்றைய நாள் உங்களுக்கு மனதிற்குள் இருந்த சஞ்சலம் படிப்படியாக குறையும். வாழ்க்கையில் முன்னேறிச் செல்லக் கூடிய சூழலில் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கண்டிப்பாக உங்களால் வளர்ச்சி பெற முடியும். பிரச்சனைகளை எளிதாக சமாளிக்க முடியும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். செலவுகளை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும். வேகமுடன் வாகனத்தை இயக்க வேண்டாம். அன்பை வெளிப்படுத்த வேண்டும். எந்த காரியத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை அணுகி மன நிம்மதியை இழக்க வேண்டாம். செய்யும் பணியை சிறப்புடன் செய்வீர்கள்.
சில நேரங்களில் தொய்வு ஏற்பட்டாலும் சரியாகிவிடும். குடும்பத்திலுள்ளவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் மஞ்சள்