Categories
தேசிய செய்திகள்

இனி இந்த வங்கி இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…..!!!!

நாட்டில் நிதி நிலை மோசமான வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சில வங்கிகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், டெபாசிட்டர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த வரிசையில், கோவா மாநிலத்தில் இயங்கி வந்த மட்காம் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி நேற்று ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மட்காம் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் தற்போதைய நிதி நிலை மோசமாக உள்ளது. எனவே, டெபாசிட்டர்களுக்கு முழு பணத்தையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. மேலும், அனைத்து டெபாசிட்டர்களுக்கும் டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உறுதி கழகத்திடம் இருந்து மொத்த டெபாசிட் தொகையில் 99% கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

மட்காம் நகர்ப்புற கூட்டுறவு வங்கியிடம் போதிய மூலதனம் இல்லை. மேலும், வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் குறைவாக உள்ளது. இதுபோல, வங்கி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளுக்கு இணங்காமல் செயல்பட்டதாக தெரிகிறது. இந்த காரணங்களுக்காக மட்காம் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டதால் மட்காம் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |