காக்னிசண்ட் நிறுவனமும் இந்த ஆண்டு சுமார் 1 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தவுள்ளது. மேலும், 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 45,000 ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க காக்னிசண்ட் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிரயன் ஹம்ப்ரீஸ், “2021ஆம் ஆண்டில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டிலேயே 30,000 ஃப்ரஷர்களுக்கு வேலை வழங்க காக்னிசண்ட் திட்டமிட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் வேலைவாய்ப்புகளை தேடி வரும் இளைஞர்கள், ஃப்ரஷர்கள் இதனால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories