Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷாரா இருங்க…. சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.

இவை அனைத்திலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பெண்களுக்கு பல விதமான பிரச்சினை ஏற்படுகிறது.  இதையடுத்து ஃபேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிட வேண்டாம். புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்து பணம் பறிக்க நேரிடலாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு எண், ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம். KYC அப்டேட் என லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம். வங்கி தொடர்பான பணம் இழப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோர் 155260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |