Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என. பள்ளி கால அட்டவணை தயாரித்தல், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணி, கல்வி தொலைக்காட்சி பணிகள், மாணவர் சேர்க்கை பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |